Archive for the ‘அம்மி கொத்த சிற்பி’ Category

அம்மி கொத்த சிற்பி

sculptor2

அம்மி கொத்த சிற்பி எதற்கு? என்று ஒரு காலத்தில் திரைப்பட பாடல் எழுதுவது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த கவிக்கோ அப்துல் ரஹ்மான், முதன்முறையாக திரைப்படப் பாடலாசிரியர் ஆகிறார்!

கடந்த பல வருடங்களுக்கு முன் திரைப்படத்திற்கு பாடல் எழுத அழைக்கப்பட்டார் ரஹ்மான். மறுப்பேதும் சொல்லாமல் பாடல் எழுத வந்தார் கவிக்கோ. ஆனால், பாட்டுக்கு மெட்டு போட்டால் சம்மதம். மெட்டுக்கு பாட்டெழுத நான் தயாரில்லை என்று திரும்பிவிட்டார். ‘அப்போதுதான் அம்மி கொத்த சிற்பி எதற்கு?’ என்ற விமர்சனத்தையும் வைத்தார். இதற்கு பதிலளித்த கவிப்பேரரசு வைரமுத்து, ‘சிற்பிக்கு அம்மி கொத்தவும் தெரிந்திருக்க வேண்டும்’ என்ற எதிர்வாதத்தை வைத்தார்.

தற்போது இசைஞானி இளையராஜா, அப்துல் ரஹ்மானின் கவிதை தொகுப்பு ஒன்றில் இருந்து திரைப்படம் ஒன்றிற்கு பொருத்தமான ஒரு பாடலை தேர்ந்தெடுத்து இசையமைக்கப் போகிறாராம். இதை கவிக்கோவிடமே கூறி, அவரது அனுமதியையும் பெற்றுவிட்டாராம். நினைத்த மாதிரியே பாட்டுக்கு மெட்டு என்பதை சாதித்து விட்டார் அப்துல் ரஹ்மான்!