கவிக்கோ அப்துல் ரகுமான் பேராசிரியராக பணியாற்றிய காலத்தில். தன்னுடைய மாணவர்களுடன் கலந்துரையாடலில் மாணவர்களிடையே ஒரு போட்டி வைத்தாராம். அதாவது ஒரு விலைமாதுவின் சமாதியில் ஒரு வாசகம் எழுதவேண்டும். என்ன வாசகம் எழுதலாம் என்று போட்டி வைத்தார்.
முதலாம் மாணவன்
பால்வினை நோய் விருட்சம்
இரண்டாம் மாணவன்
சுக கிடங்கின் நித்திரை
மூன்றாம் மாணவன்
வாடகை மனைவியின் உறக்கம்
இறுதியான ஒரு மாணவன் சொன்னான்
இன்றுதான் இவள் தனியாக தூங்குகிறாள்.
பரிசு பெற்ற வாசகம் இதுதான்.